முகப்பு
தற்போதைய செய்திகள்

மண் சரிந்து மாட்டுவண்டித் தொழிலாளி சாவு

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவர் அப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மாட்டுவண்டியில் ஏரி மண் அள்ளிக்கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார்.

Updated On : 24 ஜூன் 2013, 8:03 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே ஏரி மண் சரிந்து விழுந்ததில் மாட்டு வண்டித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவர் அப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மாட்டுவண்டியில் ஏரி மண் அள்ளிக்கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை பொத்தேரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அவரது உடலை மீட்டனர். இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.