முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூர் அருகே பேருந்து லாரி மோதல் 9 பேர் காயம்

திருச்சியிலிருந்து கரூருக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று வந்தது. வீரராக்கியம் அடுத்த பொய்யாபுதூர் அருகே வந்தபோது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த

Updated On : 28 ஜூன் 2013, 5:43 pm IST
பகிர்:

கரூர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

திருச்சியிலிருந்து கரூருக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று வந்தது. வீரராக்கியம் அடுத்த பொய்யாபுதூர் அருகே வந்தபோது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராஜலட்சுமி (70), கோமதி (38), மனோகர் (16), வேலுச்சாமி (28), சுப்பிரமணியன் (29), பழனிச்சாமி (29), வசந்தகுமார் (21), பழனிவேலு (31), சுரேஷ் (34) ஆகிய 9 பேர்களும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து லாலாபேட்டை காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.