பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கிறார் நவாஸ் ஷெரீப்
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
பாகிஸ்தானில் மூன்றாவது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 127 இடங்களில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி முன்னிலை வகித்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பான்மையான இடங்களில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னிலை வகித்து வருவதால் அவர் ஆட்சி அமைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
Advertisement
Advertisement