வியாசார்பாடியில் மின்வாரிய அலுவலகம் சூறை: 2 பேர் கைது
வியாசர்பாடி, சர்மாநகர், சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை இரவு வரை நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட
சென்னை வியாசார்பாடியில் மின்வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டதையடுத்து 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, சர்மாநகர், சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை இரவு வரை நீடித்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மின் வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து கண்ணாடி, ஜன்னல், மேஜைகளை நொறுக்கி சூரையாடினர். இது குறித்த தகவலறிந்த போலீஸார் பொது மநக்களை சமாதானம் செய்தனர். மேலும் மின் விநியோகமும் வழங்கப்பட்டது.
ஆனால் மின் வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டது குறித்து அவ்வலுவகத்தின் உதவி பொறியாளர் ராமையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சாஸ்திரி நகரை சேர்ந்த பூமிநாதன், பாலனை கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement