முகப்பு
தற்போதைய செய்திகள்

ரேஷன் கடைகளில் ரூ. 17 ஆயிரம் முறைகேடு

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் நோக்கில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 43 ரேஷன் கடைகளில்  அண்மையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களால் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ. 17,067 மதிப்பு அளவுக்கு முறைகேடுகள்

Updated On : 19 மே 2013, 3:02 pm IST
பகிர்:

கரூரில் 43 ரேஷன் கடைகளில் ரூ. 17 ஆயிரம் மதிப்புக்கு  முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மா. சந்தானம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தும் நோக்கில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 43 ரேஷன் கடைகளில்  அண்மையில் கூட்டுறவுத் துறை அலுவலர்களால் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ரூ. 17,067 மதிப்பு அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடிமைப்பொருள்களை எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் சரியான அளவுகளில், அனைத்து வேலை நாட்களிலும் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணித்திட  அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின்  தலைவர், செயலர்கள், பொது விநியோகத் திட்ட கள அலுவலர்கள் ஆகியோருக்கு தக்க அறிவுரைகளை இணைப்பதிவாளர் மா. சந்நதானம் வழங்கினார்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.