குடிநீர் கேட்டு சாலை மறியல்
கரூர் நகராட்சிக்குள்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர். இங்குள்ள 38, 39 ஆகிய வார்டுகளில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதையடுத்து இந்தப் பகுதி பொதுமக்கள் திருச்சி, கரூர் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய
கரூர் நகராட்சிக்குள்பட்ட கருப்பக்கவுண்டன்புதூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் நகராட்சிக்குள்பட்ட கருப்பக்கவுண்டன்புதூர். இங்குள்ள 38, 39 ஆகிய வார்டுகளில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதையடுத்து இந்தப் பகுதி பொதுமக்கள் திருச்சி, கரூர் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, பொதுக்களை சமாதானப்படுத்தினர். நகராட்சி அலுலவலகத்தில் இருந்து 2 அலுவலர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து முறையாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.பொதுமக்களின் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.