முகப்பு
தற்போதைய செய்திகள்

விபத்தில் இறந்தவர் கொல்லப்பட்டதாக போலீசில் புகார்

கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் கடை நடத்தி வந்தவர் ஐயப்பன்(32). இவர் தொழிற்பேட்டை அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக  மோட்டார் சைக்கிளில்

Updated On : 29 மே 2013, 5:03 pm IST
பகிர்:

மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தவர்  கொல்லப்பட்டதாக போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் கடை நடத்தி வந்தவர் ஐயப்பன்(32). இவர் தொழிற்பேட்டை அருகே உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக  மோட்டார் சைக்கிளில் சென்றவர்  வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சணப்பிரட்டி அருகேயுள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில், உயிரிழந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த பசுபதிபாளையம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று ஐயப்பனின் அண்ணன் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில், ஐயப்பன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்தனர். ஆய்வாளர் அருள் மொழி அரசு பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.