சிதம்பரத்தில் தமிழகக் கல்வியாளர் கழகம் தொடக்கம்!
மாநிலம் தழுவிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு நிறுவனத் தலைவராக ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.கலைச்செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக
சிதம்பரத்தில் தமிழகக் கல்வியாளர் கழகம் என்ற அமைப்பு தொடக்கவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலம் தழுவிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு நிறுவனத் தலைவராக ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.கலைச்செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளராக ஓய்வுபெற்ற உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.விஜயராகவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆ.கலைச்செல்வன் தெரிவித்தது: இந்த அமைப்பானது தமிழகக் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும். கல்வி ஆலோசனைகளை வழங்கும், குறை, நிறைகளை சுட்டிக்காட்டி கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் என தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.