ரசாயணப் பொடியைத் தூவி:ஒசூர் அருகே இளம் பெண்ணிடம் ரூ.24 ஆயிரத்தை பறித்த இளைஞர் கைது
ஒசூர் அருகே இளம்பெண்ணிடம் ரூ.24 ஆயிரத்தை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பியோடி விட்டனர்.
ஒசூர் அருகே இளம்பெண்ணிடம் ரூ.24 ஆயிரத்தை பறித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பியோடி விட்டனர்.
ஒசூர் வட்டம் சூசூவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜேபமணி(35). இவர் வியாழக்கிழமை சூசூவாடி இந்தியன் வங்கியில் இருந்து ரூ.24 ஆயிரத்தை எடுத்து கொண்டு அங்குள்ள மளிகைக் கடைக்குச் சென்றார். அப்பொழுது இரு ச்க்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் ஜெபமணி மீது ஒரு வித ரசாயணப் பொடியைத் தூவினர். இதில் ஜெபமணிக்கு அரிப்பு ஏற்படவே கையில் வைத்திருந்த பையை கீழே வைத்துவிட்டு கையை தடவினார்.
அப்பொழுது அந்த இளைஞர்கள் பையை எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடினர். ஜெபமணி சப்தம் போடவே பையையும், இரு சக்கர வாகனத்தையும் போட்டுவிóட்டு தப்பியோடினர்.
Advertisement
Advertisement
அருகில் இருந்த பொதுமக்கள் 3 இளைஞர்களில் ஒருவரை பிடித்தனர். அப்பொழுது அந்த இளைஞர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். பின்னால் வந்த ஒருவர் திருடனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை கைப்பற்றினார். பின்னர் அவரை அங்கிருந்த பொதுமக்கள் தாக்கினர்.
பின்னர் அருகில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிóத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரிடம் பொதுமக்கள் திருடனை ஒப்படைத்தனர்.
அப்பொழுது போலீஸார் நடத்திய விசாரணையில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(25) என்பது தெரிய வந்ததது. தப்பியோடிய 2 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விட்டுவிட்டுச் சென்ற இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் சிப்காட் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.