ஒசூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு
ஒசூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை திங்கிழமை இறந்தது.
ஒசூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை திங்கிழமை இறந்தது.
ஒசூர் அருகே உள்ளது பேரண்டப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தைச சேர்ந்தவர் ரமேஷ்(35). இவருடைய மனைவி சாந்தி. இவருடைய மகள் சரண்யா(2). குழந்தை சரண்யா வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
திடீரென அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்தது. இதனை அருகில் இருந்த பார்த்து தொட்டியில் இருந்த குழந்தையை காப்பாற்றினர். மயக்கம் அடைந்த குழந்தையை ஒசூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.