தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் அஞ்சலி: இலவச உணவு வழங்கப்படுகிறது!

தினமணி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் கடந்த திங்கள்கிழமை இரவு 11.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்திலும், இறுதிச் சடங்கிலும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும், பொதுமக்களும் மறைந்த ஜெயலலிதாவுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல் சந்தனப்பேழையில் வைத்து எம்ஜிஆர் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று மூன்றாவது நாளாக, அவரது நினைவிடத்துக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெண்கள் உள்பட நிறைய பேர், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மொட்டை அடித்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்கள் எந்தப் பிரச்னையும் இன்றி ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தி தங்களது அஞ்சலியை மக்கள் செய்து வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் மக்களுக்காக, ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இலவசமாக கிச்சடி, பொங்கல், சாம்பார் சாதம் போன்ற உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக கட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிமுக தொண்டர்கள் உள்பட அஞ்சலி செலுத்த வரும் அனைத்துப் பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவும் தண்ணீரும் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT