தற்போதைய செய்திகள்

முத்தலாக் முறையில் மாற்றம் செய்ய முஸ்லிம் மதத்தினர் முன்வர வேண்டும்: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு

DIN

புதுதில்லி:  முத்தலாக் முறையில் மாற்றம் செய்ய முஸ்லிம் மதத்தினர் முன்வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது முத்தலாக் முறை என்பது ஒரு தனிப்பட்ட விசயம் இல்லை. இது பெண் சமூகத்திற்கான நீதி சம்பந்தப்பட்டது. எல்லா பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். குழந்தை திருமணம், சதி மற்றும் வரதட்சணை போன்ற இந்து சமுதாயத்தில் இருந்த சில மூடப்பழக்கங்களை அகற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

அதுபோல் முத்தலாக் முறையில் மாற்றம் செய்ய முஸ்லிம் மதத்தினர் முன்வர வேண்டும். இல்லையெனில் முத்தலாக் தடைக்கு அரசு சட்டம் கொண்டுவர நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT