FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவில் சர்வீஸ் தேர்வு: ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் பிரதாப் முருகன் மாநில அளவில் முதலிடம்

யு.பி.எஸ்.சி. நடத்திய 2016 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது.

29 ஜனவரி 2024, 8:08 pm IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்:  யு.பி.எஸ்.சி. நடத்திய 2016 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டுள்ளது. தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார்.

தேசிய அளவில் அவர் 21-வது இடத்தை பிடித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ரோட்டடி தெருவைச் சேர்ந்த பிரதாப் முருகன் 5-ம் வகுப்பு வரை வத்திராயிருப்பு ரெங்காராவ் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை திருநெல்வேலி ரோஸ் மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளை மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார்.

சென்னை, கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த இவர், தில்லியில் உள்ள வஜ்ரம் இன்ஸ்டிடியூட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி எடுத்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளார். தற்போது வெளிவந்துள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் பிரதாப் முருகன் தேசிய அளவில் 21-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

இவரது சகோதரர் சிவராம போஸ், கோயமுத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை இரணாடாம் ஆண்டு படித்து வருகிறார். பிரதாப் முருகனின் சாதனையையடுத்து வத்திராயிருப்பில் பல்வேறு தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments