முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளில் நிலைப்பெற்றது. 

Updated On : 5 ஏப்ரல் 2018, 6:56 pm IST
பகிர்:

பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளில் நிலைப்பெற்றது. 

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 10,325.15. புள்ளிகளில் உள்ளது. இதைபோல் டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், எச்.யு.எல், டிசிஎஸ், என்டிபிசி, விப்ரோ, ரிலையன்ஸ், சன் பார்மா, எச்டிஎஃப்சி, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.67 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், டாடா மோட்டார்ஸ், எம் & எம், மாருதி சுசூகி மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகள் 3.11 சதவீதம் அதிகரித்துள்ளன. இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

Advertisement

ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறுகிய கால வட்டிவீதம், வங்கிகளில் டெபாசிட் சீட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி கொள்கை வட்டி வீதம் ஆகியவைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று நாணயக் கொள்கை கமிட்டியின் உறுப்பினர்கள் இன்று முடிவு செய்தனர். இந்த முடிவு பங்குசந்தைக்கு ஊக்கம் தந்தது. அதனால் குறியீட்டெண்கள் உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments