ஒன்றாம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் வாங்கிய பள்ளி முதல்வரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஒன்றாம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி முதல்வர்
ஒன்றாம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி முதல்வர் ஆனந்தனின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1 ஆம் வகுப்பில் மாணவரைச் சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தனை சிபிஐ போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆனந்தன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி திருநீலபிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முகமது இப்ராஹீம் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இதனையடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement