முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் விமான என்ஜின் வெடித்து சிதறியது: பெண் பயணி ஒருவர் பலி

அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 என்ற விமானம் நியூயார்க் நகரில் இருந்து இன்று

Updated On : 18 ஏப்ரல் 2018, 6:28 pm IST
பகிர்:

அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 என்ற விமானம் நியூயார்க் நகரில் இருந்து இன்று டல்லாஸ் நோக்கி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது வெடித்துச் சிதறியது. அதிவேகமாக பாய்ந்து வந்த இன்ஜின் பாகங்கள் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் தலை, காற்றின் அதிக அழுத்தம் காரணமாக ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடலும் வெளியே தள்ளப்பட்டது. இன்ஜின் பாகமான உலோகத் துண்டும் அவரை தாக்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.