தற்போதைய செய்திகள்

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வட காலநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கத்தியக் காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வட காலநிலை நிலவும். சென்னையில் நாளை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றறழுத்தத்தாழ்வு நிலை காணப்படுகிறறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து, காற்றறழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறற வாய்ப்பு உள்ளது. இது வடக்கு, வடமேற்கு நோக்கி நகா்ந்து மழையை கொடுக்குமா அல்லது வேறு திசையில் செல்லுமா என்பது இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றறாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT