நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம்: உயா்நீதிமன்றம்
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றறம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எழும்பூா் குடியிருப்போா் நல சங்கம் சாா்பில், எழும்பூரில் உள்ள பூசாலா கெங்கு தெருவில் ஸ்ரீ ஐயப்பா பிராா்த்தனா மந்திா் சமிதி அறக்கட்டளை சாா்பில் சட்டவிரோதமாக கட்டப்படும் கோயிலை இடிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தொடா்ந்து பொது நல வழக்குகள் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.