தற்போதைய செய்திகள்

ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா?: கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்

DIN

தமிழக அரசியல் சூழலில் தற்போதைய நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று அதிமுக சரிவை சந்திக்கும் என்று இந்தியா டுடே கார்வி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக அரசியலில் செயல்பட முடியாத நிலையால், தமிழக அரசியல் நாள்தோறும் புதிய அதிரடி அறிவிப்புகளும், மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன.  

தினகரன் வளர்ச்சி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் அறிக்கை அரசியல் பிரவேசம் என நாளும் அதிரடி திருப்பங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஒரு தெளிவான அரசியல் நிலை எட்டப்படாத நிலையில், தற்போது தமிழகத்திற்கு பேரவை தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கும் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இணைந்து தமிழகத்தின் 77 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளன. 

அதிமுக: 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆளும் அதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 68 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்று சரிவை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.  

திமுக: 2016 பேரவை தேர்தலில் 88 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக, தற்போதைய அரசியல் சூழலில் தேர்தல் நடைபெற்றால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குடன் தேர்தல் களம் கண்டால் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 34 சதவீத வாக்கு வங்கியை திமுக பெறும் என்றும் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

வெற்றிடம்:  ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக சுமார் 65 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் நாட்டு நடப்புகள் அனைத்தும் சிதைந்துள்ளதாகவும் மக்கள் கருதுவதாக சர்வே கூறுகிறது. 

2016 தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களில் 3ல் ஒருவர் தற்போதைய சூழ்நிலையில், அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்றே தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். 

ரஜினி: அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் 60 சதவீத வாக்காளர்களின் கவனம் ரஜினியின் பக்கம் திரும்பியுள்ளது என்றும் அவர்களில் 26 சதவீதம் பேர் திமுகவிற்கு சாதகமாக திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ரஜினியின் தலைமையிலான கட்சிக்கு 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் தினகரன், கமல்ஹாசனுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவீதம்: 

கட்சிகள்வெற்றி வாக்கு சதவீதம்
திமுக13064 %
அதிமுக6826%
ரஜினி3316 %
மற்றவர்கள்324%

* தமிழகத்தில் பாஜக நுழைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு 71 சதவீதம் பேர் ஆம் என தெரிவித்துள்ளனர்.

* ரஜினியால் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியுமா என்ற கேள்விக்கு 51 சதவீதம் பேர் இல்லை என்றும் அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பன்னீர்செல்வத்துக்கு 25 சதவீதம் பேரும், பழனிசாமிக்கு 12 சதவீதம் பேரும் இருவரும் இல்லை என 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

* அதிமுக சிதைந்து போகுமா? என்ற கேள்விக்கு ஆம் என 54 சதவீதமும் பேரும், இல்லை என 35 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* கமலுடன் ரஜினி கூட்டணி அமைப்பாரா? என்ற கேள்விக்கு ஆம் என 29 சதவீதமும் பேரும், இல்லை என  - 31 சதவீதம் பேரும்,  எதிரெதிராக நிற்பார்கள் - 23 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* ரஜினியின் அரசியல் எதிர்காலம்? குறித்த கேள்விக்கு வெற்றிகரமாக மாறும் என - 53 சதவீதம் பேரும், தோல்வி அடையும் என - 34 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* தேர்தல் வந்தால் வாக்குகளுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பார்களா என்ற கேள்விக்கு ஆம் என 72 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT