தற்போதைய செய்திகள்

நாகாலாந்து: நெய்பியு ரியோ தலைமையிலான ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு

DIN

கோஹிமா: நாகலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியுடன் சேர்ந்து 32 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் நெய்பியு ரியோ தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று சனிக்கிழமை வெளிவந்தன. இவற்றில் திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கு 27 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 12 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. தேசிய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், போட்டியின்றி ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார். 

நாகாலாந்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நெய்பியு ரியோ தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும், தங்களுக்கு ஆதரவாக உள்ள 32 உறுப்பினர்களின் பெயர் பட்டியலுடன் நெய்பியு ரியோ மற்றும் பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவிடம் அளித்தனர்.

இதையடுத்து, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பெற்றுள்ள தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியு ரியோவிடம் இருப்பதாகவும், அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் ஆளுநர் பி.பி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

நாகலாந்தில் நெய்பியு ரியோ மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT