தற்போதைய செய்திகள்

கூடங்குளம் போராட்டக் குழு உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

DIN

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து மக்களைத் திரட்டி போராடி வருகிறவர் எஸ்.பி. உதயகுமார். இவர் பச்சை தமிழகம் கட்சியையும் உருவாக்கியுள்ளார். 

மத்திய அரசை கடுமையாக உதயகுமார் விமர்சித்த நிலையில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், உதயகுமாரை விசாரணைக்கு வரவழைத்து சம்மன் அனுப்பியுள்ளனர். 

இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயகுமார், மத்திய உள்துறை அமைச்சகத்தாலும், தமிழக சிபிசிஐடி துறையாலும் அக்குவேறு ஆணிவேறாக பரிசோதிக்கப்பட்டிருக்கும் எனது கணக்கு வழக்குகளை தங்களுடைய சென்னை அலுவலகத்துக்குக் கொண்டுவரும்படி அமலாக்கத்துறை பணித்திருக்கிறது. அவர்கள் கேட்டிருக்கும் ஆவணங்களுடன் சென்னை செல்கிறேன் என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT