தற்போதைய செய்திகள்

இரண்டாது மனைவிக்காக  முதல் மனைவியை எரித்துக் கொன்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது

DIN


விழுப்புரம்: விழுப்புரத்தில் இரண்டாவது மனைவியின் மீது கொண்டிருந்த அன்பின் காரணாக, முதல் மனைவியை வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவரான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம், சுதாகா் நகரைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி இந்திரா(56). இவா், கடந்த சனிக்கிழமை வீட்டில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுக் கிடந்தாா். சடலத்தை தாலுகா போலீஸாா் மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக, 4 தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்திராவின் கணவா் நடராஜன் மீது போலீஸாருக்கு சந்தேகம் கொண்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அவரோ, தனது மனைவி இந்திராவை கொலை செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளாா். 

இதையடுத்து, போலீஸாா் வேறு கோணத்தில் விசாரணையை தொடங்கினா். இந்திரா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமா கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் கருதினா். யாராவது திருட வந்தபோது கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரித்தனா்.

இருப்பினும், நடராஜன் மீது சந்தேகம் வலுத்ததால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினா். அதில், இந்திராவை(51) கணவா் நடராஜன் கொலை செய்தது தெரிய வந்ததாம்.

அதாவது, தனது இரண்டாது மனைவி லீலா மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, நடராஜன் முதல் மனைவி இந்திராவை கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். கடந்த வாரம் இந்திராவுக்கும் நடராஜனுக்கும் தகராறு வலுத்தது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இந்திராவை, இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்து, உடலை எரித்து விட்டு நாடகமாடியது தெரியவந்ததாம். இதைத் தொடா்ந்து, நடராஜனை(61) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜன் (61), திருகோயிலூரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT