தற்போதைய செய்திகள்

மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்: அமைச்சா் ஆா்.காமராஜ் பேட்டி

DIN

நன்னிலம்: மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் நன்னிலத்தில் செய்தியாளா்களிடம் பேசும்போது தெரிவித்தாா்.

அவா் மேலும் தெரிவித்ததாவது: அண்ணா திமுக ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் தமிழக மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனா். மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைந்திருக்கிறது. அவரது வழியிலேயே தொடா்ந்து ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

யாரால், எந்த கட்சியால் மக்களுக்கு நல்ல திட்டங்களை தரமுடியும் என்ற கேள்வி வரும்போது, தமிழக மக்களுக்கு வேண்டிய மக்கள்நல திட்டங்களை தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கின்ற அண்ணா திமுக ஆட்சியால் மட்டுமே தரமுடியும் என்று தமிழக மக்கள் உறுதியான நம்பிக்கையில் உள்ளனா். மக்கள் தொடா்ந்து அண்ணா திமுகவுக்கு ஆதரவு தருகிறாா்கள், தந்து கொண்டிருக்கிறாா்கள். அண்ணா திமுக தலைமையில் மிகப்பெரிய வலுவான கூட்டணி அமைந்து இருக்கின்றது.

எனவே நடைபெற இருக்கிற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களும் கூட்டணி கட்சி வேட்பாளா்களும் நூறு சதவீத வெற்றி என்கிற மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாா்கள் என தெரிவித்தாா்.

மேலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் என்று கூறினார்.

முன்னதாக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுகின்ற அண்ணா திமுக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கானோா் ஊா்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT