தற்போதைய செய்திகள்

அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?: முதல்வர் குமாரசாமி ஆவேசம்

DIN

பெங்களூரு: அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

சில தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்கள் அரசியல்வாதிகளை கிண்டல் செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனை கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்டித்துள்ளார். 

மைசூருவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் குமாரசாமி, அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என ஆவேசம் கேள்வி குமாரசாமி, அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாகவும் கூறினார். 

மேலும், எங்கள் பெயரை தவறாக பயன்படுத்துதற்கு நீங்கள்(மீடியா) யார்? எங்களை போன்ற அரசியல்வாதிகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் வேலையில்லாமல் இப்பதாக நினைக்கிறீர்களா? நாங்கள் என்ன உங்களுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? எங்களை சிறுமைப்படுத்துவதற்கு நீங்கல் யார்? உங்களை பற்றியெல்லாம் எனக்கு கவலையோ, பயமோ இல்லை. இணையதளங்களில் வரும் சில கதைகள், தகவல்களை எல்லமாம் படித்தாம் தூக்கம் போய்விடும். அதனால்தான் அதைக் கண்டுகொள்வதில்லை எனறு ஆவேசமாகப் பேசினார்.

கர்நாடக ஆட்சியில் சிலரின் யூகங்களை போல எதுவும் நடக்காது. ராகுல் நல்லாசி மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவுடன் மக்களாட்சி ஆட்சி தொடரும் என்றார். 

HD Kumaraswamy: Whom are you (media) trying to help by misusing our name. I'm thinking of bringing in a law. What have you thought of us politicians? You think we're jobless? Do we look like cartoon characters to you? Who gave you authority to show everything humorously?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT