தற்போதைய செய்திகள்

பிரேசிலில் ஒரே நாளில் 54,685 பேருக்கு கரோனா

DIN

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புதன்கிழமை ஒரே நாளில் 54,685 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 28,62,761 ஆக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 1,322 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 97,418 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை 4.8 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலும் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவுகிறது. 

உலம் முழுவதும் 1,89,79,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,11,277 பேர் பலியாகியுள்ள நிலையில், பிரேசிலில் கரோனா நோய்த்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 28,62,761 லட்சத்தை தாண்டியது. அங்கு ஒரே மாதத்தில் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு இதுவரை 97,418 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 20,20,637 பேர் குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 7,36,388 பேர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகளவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT