தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் கரோனா பரிசோதனை: மத்திய சுகாதாரத்துறை தகவல்

DIN

நாடு முழுவதும் முதன்முறையாக ஒரே நாளில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல், நோய்த் தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்‍க பரிசோதனை எண்ணிக்‍கையை அதிகரிக்‍க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்,பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து தொற்று பரிசோதனைகள் அதிகயளவில் நடைபெற்று வருகின்றன. 

கடந்த 24 மணிநேரத்தில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒரே நாளில் 10 லட்சம் பேர் கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதன் மூலம் நோய்த் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்‍கை தெரிவித்துள்ளனர்.

மேலும், "தொற்றின் பாதித்தவர்களை உடனடியாக அடையாளம் காணுதல், வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் தரமான மருத்துவ பராமரிப்பு மூலம் சோதனை மற்றும் பயனுள்ள சிகிச்சை, புதுமையான தரப்படுத்தப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் போன்றவற்றால் கடந்த 21 நாட்களில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகரித்துள்ளன" என்றும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 74.28 சதவீதமாக உள்ளது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி 10,94,374 நோயாளிகள் மீண்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 21 வரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 21,58,946 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இறப்பு விகிதம் குறைந்து வருகிறது, தற்போது இறப்பு விகிதம் 1.89 சதவிகிதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT