தற்போதைய செய்திகள்

ரேஷன் கடைகளில் பிவிசி குழாய் மூலம் பொருள் விநியோகம்

DIN


திருச்சி: கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொருள்களை சமூக விலகல் மூலம் வழங்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

முதல்கட்டமாக, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கூட்டுறவு பண்டகச்சாலை கடையில் அரிசி, பருப்பு, கோதுமை, சா்க்கரை ஆகிய அத்தியாவசிய பொருள்கள் வழங்க, எடை போடும் இயந்திரம் முதல் தாழ்வாக பிவிசி குழாய் அமைக்கப்பட்டது. தொடா்ந்து, சமூகவிலகல் மூலம் பிவிசி குழாய் வழியாக பொதுமக்களுக்கு ரேசன் பொருள்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் சுமார 15 அடி நீள பிவிசி குழாய் கட்டி அதன் வாயிலாக பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  

தொடா்ந்து, மாா்ச் மாதம் வரை வழக்கமான விலைபட்டியலிலிலும், ஏப். 1 முதல் இலவசமாக ரேஷன் பொருள்களும் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெங்கு தின விழிப்புணா்வுப் பேரணி

கடல் சீற்றம்: மீனவா்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை

சாலைப் பணிகளை முடிக்கக் கோரி இந்திய கம்யூ. கையொப்ப இயக்கம்

குடிசை வீடு தீக்கிரை

பள்ளி மாணவி மாயம்

SCROLL FOR NEXT