தற்போதைய செய்திகள்

திருச்சி அரசு மருத்துவருக்கு கரோனோ தொற்று இல்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

DIN

திருச்சி: காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவருக்கு கரோனோ தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனோ தடுப்பு சிகிச்சைக்காக 75 படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, கரோனோ தொற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் மற்றும் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பல் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதி செய்ப்பட்டுள்ளது. 

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் நிம்மதியடைந்துள்ளன. அரசு மருத்துவர் ஒருவருக்கே தொற்று இருப்பதாக பரவிய வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT