தற்போதைய செய்திகள்

கரோனா வைரஸ் தொற்று: ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா பலி

DIN


ஸ்பெயின்: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். 

கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து பரவத்தொடங்கி அந்த வைரஸ், உலகம் முழுவதும் 199-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்குள்ளாவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அச்சத்தை அதிகப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 25 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரழந்துள்ளனர். உலகம் முழுவதும் 30 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா(86) தெரசா பிரெஞ்ச் தலைநகர் பாரீஸில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா உலக நாட்டு தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. 

ஸ்பெயினில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 235 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12 ஆயிரத்து 285 அந்த நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT