தற்போதைய செய்திகள்

உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.84 லட்சத்தை கடந்தது

DIN

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 56,84,795 -ஆக உயர்ந்துள்ளது.  

ஜெனீவா:  உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 56,84,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,00,000 அதிகரித்து 5.4 மில்லியனை தாண்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி,  உலகம் முழுவதும் இதுவரை 56,84,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது கடந்த நாள்களில் 99,780 அதிகரித்தது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,30,593 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,52,225 பேர் பலியாகியுள்ளனர். 
 
தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 28,48,877 பேர்களில் 53,100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

நோய்த்தொற்றுக்கு அமெரிக்காவிலே அதிக பாதிப்பும், பலியும் நிகழந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT