தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

DIN

தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம் என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

பவானியை அடுத்த சிங்கம்பேட்டையில் விவசாயிகளுக்கு கடனுதவியினை வழங்கிய அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது :

தமிழக அரசு விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, விவசாயிகளுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்கி வருகிறது. பவானி தொகுதியில் வியாழக்கிழமை மட்டும் ரூ.3 கோடியில் பயிர்க்கடன், கன்று வளர்ப்புக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாய சாகுபடிக்கும், குடிநீருக்கும் தண்ணீர் தேவை தீர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும்.

அரசியலில் நிதானம், பொறுமையுடன் செல்லும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. தமிழக நலனில் அக்கறையுடன் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதிமுகவுக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராக உள்ளனர். மாசில்லா தீபாவளி கொண்டாடுவது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT