கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த மழை
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை மிதமான வெயில் நிலவியது அதனைத் தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழையானது அப்சர்வேட்டரி, வில்பட்டி, பெருமாள்மலை, செண்பகனூர், அட்டக்கடி, இருதயபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
Advertisement
Advertisement
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொடைக்கானலுக்கு இபாஸ் பெற்று வரும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கின்றனர். ஆனால் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.