முகப்பு
தற்போதைய செய்திகள்

‘நான் எம்.எல்.ஏ.வாக தொடர்வேன்’: மேற்குவங்க முன்னாள் அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா

மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய லஷ்மி ரத்தன் சுக்லா, சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வேன் என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2021, 4:45 pm IST
லஷ்மி ரத்தன் சுக்லா
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய லஷ்மி ரத்தன் சுக்லா, சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வேன் என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் பதவி விலகல் குறித்து சுக்லா கூறியதாவது,

“நான் கிரிக்கெட் விளையாடியது போல நேர்மையாக அரசியலில் ஈடுபட்டுள்ளேன். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற எனது அடையாளம் மிக அடிப்படையானது. இப்போதைக்கு, நான் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவேன். நான் சட்டப்பேரவை உறுப்பினராக எனது பதவிக் காலத்தை நிறைவு செய்வேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் இறுதியில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments