முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓமனில் உள்ள மகளை மீட்க மத்திய அரசுக்கு பெற்றோர் வேண்டுகோள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை ஓமானில் இருந்து அழைத்து வர உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On : 8 ஜனவரி 2021, 4:22 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை ஓமானில் இருந்து அழைத்து வர உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஃபர்ஹீன் பேகம் என்ற பெண்ணிற்கும் ஓமன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், தங்களது மகளை, அவரது கணவர் கொடுமைபடுத்துவதால் இந்தியா மீட்டு வர உதவுமாறு மத்திய அரசிற்கு பெண்ணின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து  ஃபர்ஹீன் பெற்றோர் கூறுகையில்,

Advertisement

Advertisement

எங்களது மகளுக்கு திருமணமாகி 5 நாள்களுக்குள் மஸ்கட் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சென்ற பிறகு தான் அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. ஃபர்ஹீனை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வருகிறார். எனவே, எங்களது மகளை விரைவில் இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments