5-வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!
இன்றைய (ஜூலை 7) பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...
பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4 நாளாக உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்றும் (ஜூலை 7) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
78,461.16 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 171.20 புள்ளிகள் உயர்ந்து 78,456.27 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.35
புள்ளிகள் உயர்ந்து 24,482.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் பங்குகளில், பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் எச்.சி.எல். டெக் ஆகியவை லாபம் பெற்று வருகின்றன.
கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் மற்றும் ஐடிசி ஆகியவை பின்தங்கின.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.55 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.44 சதவீதம் சரிந்து வர்த்தகமாகிறது.
துறைவாரியாக நிஃப்டி ஐடி, ஹெல்த் கேர், ஆட்டோ பங்குகள் உயர்ந்தும் உலோகப் பங்குகள் சரிந்தும் வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.