படையாட்சியூரில் சமத்துவ பொங்கல் விழா
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்யாணகிரி ஊராட்சி படையாட்சியூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் கல்யாணகிரி ஊராட்சி படையாட்சியூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்யாணகிரி ஊராட்சி படையாட்சியூரில், தை புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் பி. டி. அழகரசன் தலைமையில், ஊர் கூடி சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகன், மணிகணேசன், விஜியாவீரராசு, .ஜமுனாசக்திவேல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அழகுமாலதி, ஊராட்சி செயலாளர் முருகன மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
ஒரே பானையில் சமத்துவ பொங்கல் வைத்து, அனைவரும் பகிர்ந்து உண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.