பொங்கல் விழாவில் வேஷ்டி, சட்டையுடன் பங்கேற்ற ஜெ.பி.நட்டா
சென்னையில் நடைபெறும் பொங்கல் விழாவில் வேஷ்டி, சட்டையுடன் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை பங்கேற்றுள்ளார்.
சென்னையில் நடைபெறும் பொங்கல் விழாவில் வேஷ்டி, சட்டையுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை பங்கேற்றுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார்.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பாஜக ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட பொங்கல் விழாவில் வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் முருகன், மூத்த தலைவர்கள் சி.டி.ரவி, இல.கணேஷன், வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் தில்லி செல்ல உள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.