முகப்பு
இந்தியா

டிசம்பருக்குள் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்: பியூஷ் கோயல்

டிசம்பருக்குள் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என பியூஷ் கோயல் கூறியிருப்பது தொடர்பாக...

Updated On : 21 ஜூன் 2026, 8:06 pm IST
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் - ஏஐஆர்
பகிர்:

புது தில்லி: இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வரும் டிசம்பருக்குள் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடா்பாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், இந்தியாவும் ஐரோப்பிய யூனியன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரும் டிசம்பருக்குள் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒப்பந்தத்தின் அம்சங்கள் 2027 பிப்ரவரி-மாா்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடும். இந்த ஒப்பந்தம் மூலம் எந்த வரியுமின்றி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் 27 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்புக்கு இடையே நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொள்கையளவில் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய ஏற்றுமதியில் சுமார் 93 சதவீதம் வரி இல்லாத அணுகலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியப் பொருள்களை 27 நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும். அதேசமயம் அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயா்ந்த காா்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை வெகுவாக குறையும் என அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

மேலும், இந்தியாவின் வர்த்தகத் துறைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட பியூஷ் கோயல், நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒருவருடனான பொருளாதார உறவுகளை இது வலுப்படுத்தும் என்றும் கூறினார்.

கொள்கை வகுப்பாளர்களால் பெரும்பாலும் "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என்று வர்ணிக்கப்படும் இந்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், சுமார் இரண்டு தசாப்தங்களாக நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி மாதம் இருதரப்பும் இறுதிசெய்து அறிவிக்கப்பட்டது. தற்போது, ​​அதிகாரப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, இது சட்டரீதியான ஆய்வு மற்றும் நடைமுறைச் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

summary

Union Commerce and Industry Minister Piyush Goyal said India and the European Union are expected to sign their long-awaited Free Trade Agreement (FTA) by December this year....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments