FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியா-இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா – இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது குறித்து..

Updated On : 25 ஜூலை 2026, 9:13 am IST
இந்தியா-இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு - டிஎன்எஸ்
பகிர்:

புது தில்லி: இந்தியா - இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே முன்மொழியப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் சுற்று நிறைவடைந்தது. விவாதங்கள் ஆக்கபூர்வமாகவும் எதிர்கால நோக்குடனும் அமைந்திருந்ததாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லியில் ஜூலை 20 முதல் 23-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, ​​இரு தரப்பினரும் ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான விவாதங்களை மேற்கொண்டனர்; மேலும் சமச்சீரான, விரிவான மற்றும் இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முன்னேற்றத்தைத் தொடர்ந்தனர்.

2025 நவம்பரில் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான இருதரப்பு வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

Advertisement

2025-26-ஆம் ஆண்டில் இந்தியா - இஸ்ரேல் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 3.93 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதனை மேலும் அதிகரிப்பது குறித்து நான்கு நாள் பேச்சுவார்த்தையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, ​​சரக்கு வர்த்தகம், சேவை வர்த்தகம், உற்பத்தி இடத்திற்கான விதிகள், சுகாதார மற்றும் தாவர சுகாதார நடவடிக்கைகள், வர்த்தகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள், அறிவுசார் சொத்துரிமைகள், சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக எளிதாக்கம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தத்தின் பிற பிரிவுகள் குறித்து இரு தரப்பு தொழில்நுட்ப நிபுணர்களும் விரிவான ஆலோசனைகளை நடத்தினர்.

விவாதங்கள் ஆக்கபூர்வமாகவும் எதிர்கால நோக்குடனும் அமைந்திருந்ததாகவும், கருத்து வேறுபாடுகளைக் குறைக்கவும், உடன்பாடு காணக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும் இரு தரப்பினரும் விரிவான தொழில்நுட்ப ஆலோசனைகளில் ஈடுபட்டனர் என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா - இஸ்ரேல் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலான சமச்சீரான, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

மேலும், இருதரப்பு வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட துறைகளில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, கடந்த ஆண்டு நவம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட 'செயல்பாட்டு விதிமுறைகள்' தொடர்ந்து ஒரு கட்டமைப்பை வழங்குவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா சார்பில் வர்த்தகத்துறையின் கூடுதல் செயலாளர் அஜய் படு, இஸ்ரேல் சார்பில் அந்நாட்டு பொருளாதார அமைச்சகத்தின் மூத்த இயக்குநர் இஃபாத் அலோன் பெரள் கலந்து கொண்டனர்.

summary

India and Israel concluded the second round of negotiations for the proposed India-Israel Free Trade Agreement...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments