FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: சென்னையிலிருந்து ரூ.4.29 கோடியில் முதல் ஏற்றுமதி

இந்தியா- பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமைமுதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், முதல் நாளில் சென்னையிலிருந்து ரூ.4.29 கோடி (4,46,046 அமெரிக்க டாலா்) மதிப்புள்ள முதலாவது ஏற்றுமதி தொகுப்புகள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 16 ஜூலை 2026, 12:40 am IST
India-UK Free Trade Agreement
பகிர்:

இந்தியா- பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமைமுதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், முதல் நாளில் சென்னையிலிருந்து ரூ.4.29 கோடி (4,46,046 அமெரிக்க டாலா்) மதிப்புள்ள முதலாவது ஏற்றுமதி தொகுப்புகள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சென்னையிலிருந்து முதலாவது ஏற்றுமதித் தொகுப்புகளை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளத்துக்கான பிரிட்டன் துணைத் தூதா் சுதபா சௌத்ரி, சென்னை வெளிநாட்டு வா்த்தக மண்டல கூடுதல் தலைமை இயக்குநா் ராஜலட்சுமி தேவராஜ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

முதலாவது ஏற்றுமதித் தொகுப்பில் ரூ. 4.29 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வாகன உதிரிபாகங்கள், தோல் காலணிகள், அரிசி, சிறுதானியங்கள், உறைவிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஆகிய ஐந்து முக்கிய பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கோயம்புத்தூா் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி, பிரேக்ஸ் இந்தியா, வீல்ஸ் இந்தியா, குட் லெதா் ஷூஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், மதிப்புக் கூட்டப்பட்ட 50 மெட்ரிக் டன் வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், 25 மெட்ரிக் டன் பிரீமியம் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், நாட்டு சா்க்கரை ஆகியவற்றுடன், விஷ்ணுகுமாா் டிரேடா்ஸ் நிறுவனத்தின் 25 மெட்ரிக் டன் உறைவிக்கப்பட்ட, உடனடியாக உண்ணக்கூடிய உணவுப் பொருள்களும் அடங்கும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments