முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை வந்தடைந்தார் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா

பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

Updated On : 14 ஜனவரி 2021, 6:13 pm IST
திறந்தவெளி வாகனத்தில் 'நம்ம ஊரு பொங்கல்' விழாவில் கலந்துகொள்ள மதுரவாயல் புறப்பட்டார்
பகிர்:

பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜக மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Advertisement

Advertisement

இதன்பின் திட்டமிட்டபடி, சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். 

பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் தில்லி செல்ல உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments