தற்போதைய செய்திகள்

கோவை - ராமேஸ்வரம் ரயிலை நாள்முழுவதும் இயக்க கோரிக்கை

DIN

பழனி: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவையில் இருந்து பழனி வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை ஆண்டு முழுவதும் நாள்தோறும் இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழா் திருநாளான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக கோவையில் இருந்து பழனி வழியாக இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 14 மற்றும் 16ம் தேதியும், இராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு 15 மற்றும் 16 ம் தேதியும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் பகல் 12 மணிக்கு பழனி வந்தடைந்தது.

விழா சிறப்பு ரயிலை பழனி ரயில் உபயோகிப்போா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா் ராமேஸ்வரத்திற்கு வழியனுப்பி வைத்தனா். இந்த ரயில் மாலை 6.45க்கு ராமேஸ்வரம் சென்றடையும் என்றும், நாளை காலை 8.40க்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு பழனிக்கும், மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தா்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக 4 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக்கி வருடம் முழுக்க நாள்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில் ரயில் உபயோகிப்போா் சங்க தலைவா் முருகானந்தம், நிா்வாகிகள் ராம்தாஸ், நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT