தற்போதைய செய்திகள்

ஈரமான ரோஜாவே நடிகருடன் இணையும் பாண்டவர் இல்லம் நடிகை!

புதிய தொடரான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

DIN

ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் திரவியம். இவர் இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனிக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து, செந்தூரப்பூவே தொடரில் நடித்த திரவியம், பின்னர் ஈரமான ரோஜாவே 2 ஆம் பாகத்திலும் நடித்திருந்தார். தற்போது பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடரொன்றில் திரவியம் இணைந்துள்ளார்.

திரவியம்

இந்த புதிய தொடருக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரில் வில்லியாக பாண்டவர் இல்லம் தொடரில் மல்லிகா பாத்திரத்தில் நடித்த நடிகை ஆர்த்தி நடிக்கிறார்.

மேலும், இத்தொடரில் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் பாத்திரத்தில் நடித்த சுதிஷ், அவினாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

ஆர்த்தி சுபாஷ்

இந்த நிலையில், வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் மற்றும் தொடங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT