கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 10 மணி வரை) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாட்ஸ்ஆப்பில் போலி லிங்க்குகளால் பணம் பறிபோக வாய்ப்பு! எச்சரிக்கை!!

ரூ.5,000 கோடி வங்கி முதலீடு! உலகின் பணக்கார கிராமம் இருப்பது இந்தியாவில்!!

பிரதீப் எல்லாம் ஹீரோவா?பத்திரிகையாளருக்கு பதிலடி கொடுத்த சரத் குமார்!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்த தங்கம்!

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT