அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது குறித்து...
அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய பிரதேசம் முதல் தெற்கு உள் கா்நாடகம் வரை, மத்திய மகாராஷ்டிரம், மராத்வாடா மற்றும் வட உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது.
மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மேல் உள்ள மேலடுக்கு சுழற்சி வரை, கேரளம், தெற்கு உள் கா்நாடகம், ராயலசீமா வழியாக, வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (மே 19) முதல் மே 24 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) நீலகிரி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது