FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

'என்னை சிறையில் என்ன செய்வார்கள் என்று தெரியாது' - கேஜரிவால்

சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்தாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை சிறையில் என்ன செய்வார்கள் என்று தெரியாது.

2 ஜூன் 2024, 9:10 pm IST
ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்.
பகிர்:

புதுதில்லி: நான் சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்தாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். ' அவர்கள் என்னை சிறையில் என்ன செய்வார்கள் என்று தெரியாது' என்று ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மே 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால் ஜாமின் நிறைவடைந்தைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி கேஜரிவால் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை திகார் சிறைக்கு சென்றார்.

Advertisement

Advertisement

சிறைக்கு புறப்படுவதற்கு முன்பாக தில்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அதற்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாரத்தின் போது நாட்டைக் காக்க வேண்டும் என்றே பிரசாரம் செய்தேன்.

நான் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்படவில்லை, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்தாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன்.

பஜாக தலைமையிலான என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற அனைத்து கருத்துக்கணிப்புகளும் போலியானவை. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற பாஜகவினர் முயற்சிக்கிறாா்கள்.

கேஜரிவால் அனுபவம் வாய்ந்த திருடன் என்பதால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் மீட்கப்படவில்லை என்று பிரதமா் மோடி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நான் அனுபவமிக்க திருடன் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை, எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை சிறையில் அடைத்தது ஏன்? அதிகாரம் சர்வாதிகாரமாக மாறினால் சிறை பொறுப்பேற்க வேண்டும் பகத்சிங் கூறியிருப்பார். இப்போது நான் சிறைக்கு செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் என்று எனக்கு தெரியாது. அவர்கள் சிறையில் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கவலைப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டிற்கானது. தேசத்திற்காக பகத்சிங் தூக்கிலிடப்பட்டார்.நானும் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன் என்றார் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments