முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,618 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 6 செப்டம்பர் 2024, 8:40 am IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,618 கன அடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,618 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை (செப்.6) காலை வினாடிக்கு 17,272 கன அடியிலிருந்து வினாடிக்கு 19,618 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 19,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அணையின் நீர்மட்டம் 116.24 அடியிலிருந்து 116.21 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 87.55 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.