பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதோடு, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பங்கேற்ற நிலையில், ரஜௌரியில் பாகிஸ்தான் அத்துமீறி சனிக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமர் அப்துல்லா இரங்கல்
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் நிர்வாக பணிகளில் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று மாவட்டம் முழுவதும் துணை முதல்வருடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். மேலும், எனது தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். இந்தநிலையில் ரஜௌரி நகரத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அதிகாரி ராஜ் குமார் தாப்பா வீடு தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார். அவரது உயிரிழப்பால் தனக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.