முதல்வர் விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து!
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவியேற்பு விழாவில் ஏற்பட்ட தாமதத்தைப் பார்க்கும்போது, நிலைமை இந்த அளவிற்குச் சென்றிருக்கக் கூடாது. இதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆனதுடன், ஆளுநர் மாளிகைக்கு (மக்கள் பவன்) பலமுறை செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் இறுதியாக பெரும்பான்மை எண்ணிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை என்பது சட்டப்பேரவையில்தான் நிரூபிக்கப்பட வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல. எது எப்படியோ, காலதாமதமாக நடந்தாலும் இது நல்லதுதான் என்று குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஓமர் அப்துல்லா, "அவர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார். தமிழ்நாடு முதல்வராக விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Monday congratulated his Tamil Nadu counterpart TVK chief C J Vijay on taking the oath of office.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.