மாநில அந்தஸ்து கோரும் போராட்டத்தில் இணைய யாரையும் அழைக்கப் போவதில்லை: ஃபரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக எந்தவொரு அரசியல் கட்சியையும் அழைக்கப்போவதில்லை என்பதைப் பற்றி..
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக தில்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் இணைய, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியையும் அழைக்கப்போவதில்லை எனத் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தப் போராட்டத்தில் இணைய விரும்பும் எவரும் இணையலாம். நாங்கள் யாருடைய வாசலிலும் (பிச்சை எடுக்கும்) பாத்திரத்தை ஏந்திக்கொண்டு செல்லப்போவதில்லை.
Advertisement
Advertisement
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்று, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி தில்லியில் போராட்டம் நடத்தப்போவதாகத் தேசிய மாநாட்டுக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் துணைத் தலைவரும் முதல்வருமான உமர் அப்துல்லா, 'இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தப் போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த முக்கியமான விவகாரத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தத் தேசிய மாநாட்டுக் கட்சி முயற்சிக்குமா என்று கேட்கப்பட்டபோது..
மாநில அந்தஸ்து விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளனர் என்று அக்கட்சித் தலைவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்டபோது,
"நான் கடவுள் இல்லை. அல்லாஹ்வுக்கும், தில்லியில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே அது தெரியும்," என்று அப்துல்லா பதிலளித்தார். சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கத் தங்கள் கட்சி பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
நாங்கள் அதற்காக ஏற்கனவே போராடிக்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராடுவோம். எங்களிடமிருந்து பறிக்கப்பட்டவற்றுக்கு எதிராகப் போராட எங்களுக்கு அரசியலமைப்பு ரீதியான உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
National Conference president Farooq Abdullah on Thursday said his party will not invite any political party from Jammu and Kashmir to join its protest in Delhi for restoration of statehood.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.